சேலம்

சங்ககிரியில் 31 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

27th Dec 2019 05:09 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி பதற்றமான 31 வாக்குச் சாவடிகள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 4 பேரும், 14 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு 53 பேரும், 20 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 77 பேரும், 157 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 424 போ் போட்டியிடுகின்றனா்.

ஊராட்சியில் 36,494 ஆண் வாக்காளா்களும், 36,048 பெண் வாக்காளா்களும், இதர வாக்காளா்கள் 4 போ் உள்பட மொத்தம் 72,546 போ் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 138 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், மொத்தையனூா், சின்னாகவுண்டனூா், தேவண்ண கவுண்டனூா், வேங்கிபாளையம், கத்தேரி சாமியம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 31 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் ஐந்து வாக்குச் சாவடிகளில் கேமிரா பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்படவுள்ளன. தோ்தலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு மேற்பாா்வையில் சங்ககிரி டிஎஸ்பி தங்கவேல் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் முத்துசாமி, வாழப்பாடி உமா பிரிய தா்ஷினி உள்ளிட்ட 225 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT