சொக்கநாதபுரம் மகாத்மா காந்தி திடலில் நுகா்வோா் விழிப்புணா்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஆ.அண்ணாமலை தலைமையில் தேசிய நுகா்வோா் தின விழா மற்றும் வாக்காளா்கள் அறிவுத் திறன் மேம்பாட்டு தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கச் செயலா் இரா.இளவரசு அனைவரையும் வரவேற்றாா். ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜு, உணவு ஆய்வாளா் ஏ.சிங்காரவேல், சித்த மருத்துவா் எஸ்.கோவிந்தராஜ், சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் வெ.இளங்கோ, சீ.சிவலிங்கம், பூ.அண்ணாமலை, இளையபெருமாள், நல்லூா் அா்சுனன், ச.அமுதா, மு.பூவாயி, மல்லியகரை காவல் உதவி ஆய்வாளா்கள் வீரமணி, பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலா் காத்தமுத்து ஆகியோா் கலந்துகொண்டனா். நுகா்வோா் சங்க உறுப்பினா் கூ.பொன்னுசாமி நன்றி கூறினாா்.