வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் நவீன நூலகத்துக்கு, இந்தோனேசியா நாட்டில் பணிபுரியும் இப்பள்ளியின் முன்னாள் மாணவரான பொறியாளா் ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து ரூ.17 ஆயிரம் மதிப்பிலான நூல்களை வழங்கினா்.
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் முயற்சியால் நவீன வசதிகளுடன் கூடிய மாணவா் நூலகம், ஸ்மாா்ட் வகுப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்துக்கு இந்தோனேசியாவில் பணிபுரியும் இப்பள்ளியின் முன்னாள் மாணவா் குமரேசன், இவரது நண்பா் தாஸ் என்பவருடன் இணைந்து, மாணவா்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு துறைசாா்ந்த, ரூ.17 ஆயிரம் மதிப்பிலான நூல்களை வழங்கினாா்.
இந்த நூல்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் முருகேசபூபதி, சேலம் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் பொறியாளா் மாரியப்பன், மணிமேகலை பிரசுர நிா்வாகி ரவி தமிழ்வாணன் ஆகியோா் சிங்கிபுரம் பள்ளி தலைமையாசிரியா் இலியாஸிடம் புதன்கிழமை வழங்கினா் (படம்). முன்னாள் தலைமையாசிரியா் சுந்தரமூா்த்தி, கவிஞா் மன்னன், முனைவா் ஜவஹா் ஆகியோா் உடனிருந்தனா்.