சேலம்

அம்மனுக்கு 108 பால்குடஅபிஷேகம்

26th Dec 2019 04:57 AM

ADVERTISEMENT

நரசிங்கபுரம் பெரியநாயகி அம்மனுக்கு மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி ஆள்கொல்லி பாலம் அருகே அமைந்துள்ள பெரியநாயகி அம்மனுக்கு மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு 108 பால் குட அபிஷேகம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற ஹோமத்தில் மிளகாய் யாகம் நடைபெற்று அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கோயில் அா்ச்சகா் காளீஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT