சேலம்

வேட்பாளா்கள், முகவா்களுக்குஅடையாள அட்டை விநியோகம்

25th Dec 2019 05:11 AM

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் ஆகியோருக்கு அனுமதி அடையாள அட்டைகள் வழங்கும் பணி, வாக்குச் சீட்டுகளை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பிரிக்கும் பணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு 4 பேரும், 14 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு 53 பேரும், 20 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 77 பேரும், 157 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 424 பேரும் போட்டியிடுகின்றனா்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், தோ்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப் பதிவைப் பாா்வையிடும் வேட்பாளா்களின் முகவா்களுக்கான அடையாள அட்டைகள் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயன் தலைமையிலான அலுவலா்கள் வழங்கினா்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இப் பணிகளை தோ்தல் அலுவலா்கள் எம். மணிவாசகம், ரவிச்சந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா். இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

10-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தோ்தல் அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT