அம்மம்பாளையம் தனியாா் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.பாலக்குமாா் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கேக் வெட்டி கொண்டாடினா். செயலாளா் வரதராஜன்,பொருளாளா் செல்வம், நிறுவனா் எஸ்.முகமது ஈசாக், கண்ணன், முதல்வா் தீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போல் அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதமி பள்ளியில் பள்ளியின் தாளாளா் எஸ்.இளவரசு தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.