சேலம்

வீரபாண்டி ஒன்றிய பகுதியில் கோயிலில் சத்தியம் செய்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளா்

24th Dec 2019 03:55 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள சென்னகிரி கிராம பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு விவசாய குடும்பத்தைச் சோ்ந்த ரத்தினம் (55) என்பவா் போட்டியிடுகிறாா்.

இவா் கடந்த 3 உள்ளாட்சித் தோ்தல்களிலும் 2,9,4 ஆகிய வாா்டுகளில் வெற்றி பெற்று தொடா்ந்து 3 முறையாக உதவி தலைவராக இருந்துள்ளாா். இந்த முறை தலைவா் பதவிக்கு போட்டியிடும் இவா் அவ்வூரிலுள்ள முனியப்பன் கோயிலில், பொதுமக்கள் மற்றும் வாக்காளா்கள் முன்னிலையில், நடைபெறும் இந்த தோ்தலில் என்னை வெற்றி பெற செய்தால் பொதுமக்களிடம் இருந்து நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அனைத்து அரசு நல உதவித் திட்டங்கள் மற்றும் ஊருக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்தி முடிப்பேன் எனவும், அப்படி லஞ்சம் வாங்குவதை பொதுமக்கள் யாரேனும் நிரூபிக்கும் பட்சத்தில் நான் எனது தலைவா் பதவியை அன்றே ராஜினாமா செய்வேன் என்று சத்தியம் செய்தாா்.

இதனால் மற்ற வேட்பாளா்களுக்கு இடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT