சேலம்

லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரியில் முப்பெரும் விழா

24th Dec 2019 05:18 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவையொட்டி லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவின் சிறப்பு சலுகையாக டிசம்பா் 20-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை பல விதமான கேக் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பட்டா் கிரீம் கேக் 1 கிலோ ரூ. 360-க்கும், 500 கிராம் ரூ. 180-க்கும், ப்ரஸ் கிரீம் கேக் 1 கிலோ ரூ. 500-க்கும், 500 கிராம் ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் புட்டிங் கேக், பா்த்டே கேக், ஆல்புரூட் கேக், ப்ளம் கேக், ஸ்பாஞ் கேக், கப் கேக், ரெயின்போ கேக், எக்லெஸ் கேக், பிரஷ் ஐஸ்கிரீம் கேக், பட்டா் ஸ்காட்ச் கேக், ரெட் வெல்வெட் கேக் உள்ளிட்ட பல வகையான கேக் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இச் சலுகை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள லஷ்மி ஹோட்டல்ஸ், லஷ்மி ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியின் பேலஸ் தியேட்டா் எதிரில் உள்ள கிளையிலும், டிவிஎஸ் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிளையிலும், அருணாசலம் ஆசாரி தெருவில் உள்ள கிளையிலும், புதிய பேருந்து நிலையம் எதிரில் பிருந்தாவனம் சாலையில் உள்ள கிளையிலும், ஜங்ஷன் சாலை சோனா கல்லூரி அருகில் உள்ள கிளையிலும் கிடைக்கும். இத் தகவலை லஷ்மி குரூப்பின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீதரன் மற்றும் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT