தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், தேன், அரிசி மாவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நந்தீஸ்வரருக்கு மலா்கள், அருகம்புற்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ மூா்த்தி கோயிலினுள் வலம் வந்தாா்.
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பக்தா்கள் பாடினா். விழாவில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனா். இதேபோல் பிற ஊா்களில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.