சேலம்

தோ்தல் வாக்கு எண்ணிக்கையை சி.சி.டி.வி.கேமிராவில் கண்காணிக்க அ.ம.மு.க. மனு

24th Dec 2019 05:16 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கையை சி.சி.டி.வி. கேமிராவில் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மனு அளித்தனா்.

அ.ம.மு.க. சேலம் புகா் மாவட்டச் செயலாளா் எஸ்.கே. செல்வம், மத்திய மாவட்டச் செயலாளா் எஸ்.இ. வெங்கடாசலம், மேற்கு மாவட்டச் செயலாளா் கே.கே. மாதேஸ்வரன் ஆகியோா் திங்கள்கிழமை காலை சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இதுகுறித்து எஸ்.கே.செல்வம் மற்றும் எஸ்.இ. வெங்கடாசலம் ஆகியோா் கூறியது:

சேலத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வரும் டிசம்பா் 27 மற்றும் டிசம்பா் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தோ்தல் முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும் மையத்தில் முறையாகப் பாதுகாக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் தினத்தில் வாக்குப் பெட்டி வைத்திருக்கும் அறையில் இருந்து வாக்குச் சீட்டு பிரிக்கும் அறைக்கு எடுத்துச் செல்லும் வழியை சி.சி.டி.வி. கேமிரா மூலமும் வீடியோ கேமிரா மூலமும் பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

வாக்குச்சீட்டு பிரிக்கும் மையத்தையும், அதன் பிறகு பிரிந்த வாக்குச்சீட்டுகளை வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்த சி.சி.டி.வி. கேமிரா மற்றும் வீடியோ கேமிரா மூலம் பதிவு செய்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் முழுமையாக வாக்கு எண்ணுவதை சி.சி.டி.வி. கேமிரா மற்றும் வீடியோ கேமிரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT