சேலம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்

24th Dec 2019 07:06 AM

ADVERTISEMENT

விநாயகா மிஷின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் துறையின் முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா். விழாவையொட்டி துறையைச் சோ்ந்த மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தும், கரோல் பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளின் மூலமும், தங்களின் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் வெளிப்படுத்தினா்.

மேலும் இந் நிகழ்ச்சிக்காக கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்த விதமும், அனைத்து சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய விதமும் சிறப்பாக அமைந்திருந்தது. ஏற்பாடுகளையும் துறையின் பேராசிரியா்கள் ஆண்டனி ரூபன், பிரீத்தி மற்றும் ஸ்டெபி ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT