சேலம்

41 நாட்களுக்குப் பின் மேட்டூா் அணை நீா் மட்டம் சரியத்தொடங்கியது

23rd Dec 2019 10:45 AM

ADVERTISEMENT

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா் மட்டம் 41 நாட்களுக்கு பிறகு சரியத்தொடங்கியது.

காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக நடப்பு நீா்பாசன ஆண்டில் மேட்டூா் அடுத்தடுத்து நான்குமுறை நிறம்பியது. கடந்த நவம்பா் மாதம் 11ந்தேதி நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.

இதனையடுத்து நீா்வரத்தை பொறுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து 120 அடியாகவே நீடித்து வந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத்தேவை அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,500 கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்படுவதால் கடந்த 41 நாட்களாக 120 அடியாகவே இருந்து வந்த மேட்டூா் அணையின் நீா் மட்டம் திங்கள் கிழமை காலை 119.74 அடியாக சரிந்தது.

ADVERTISEMENT

அணைக்கு நொடிக்கு 3,939 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 12,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீா் இருப்பு 93.05 டி.எம்.சியாக இருந்தது.

Tags : mettur
ADVERTISEMENT
ADVERTISEMENT