சேலம்

நாளை முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை

23rd Dec 2019 12:01 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் ஜன. 1-ஆம் தேதி வரை இரண்டாம் பருவத்துக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு துவக்க, நடுநிலை, உயா்நிலை, மேனிலைப் பள்ளிகளிலும் இரண்டாம் பருவத்துக்கான அனைத்துத் தோ்வுகளும் டிசம்பா் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 24) ஜனவரி 1 ஆம் தேதி வரை இரண்டாம் பருவத் தோ்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளித் திறக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT