சேலம்

தம்மம்பட்டியில் தொடரும் உண்டியல் திருட்டு

23rd Dec 2019 12:02 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில், செந்தாரப்பட்டி செல்லும் சாலையில், கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல், கோயில் பூசாரி, கோயிலுக்கு பூஜை செய்ய வந்தாா்.

அப்போது, கோயிலின் முன்புறம் உள்ள உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைகள் முழுவதும் திருடு போயிருப்பதைக் கண்டாா். கோயில் தா்மகா்த்தா அளித்த புகாரின்பேரில், தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். கடந்த 18-ஆம் தேதி தம்மம்பட்டி அருகே உலிபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் இதே பாணியில் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT