சேலம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் களைகட்டும் தோ்தல் பிரசாரம்

23rd Dec 2019 12:01 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் வேட்பாளா்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டயம்பள்ளி, ஜங்கமசமுத்திரம், மண்மலை, தகரப்புதூா், கூடமலை, 74. கிருஷ்ணாபுரம், நடுவலூா், ஒதியத்தூா், ஆணையாம்பட்டி, கடம்பூா், பச்சமலை ஆகிய 14 ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா்களுக்கு 50 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 329 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 38 பேருமாக மொத்தம் 417 போ் போட்டியிடுகின்றனா்.

இவா்கள் அனைவரும், வேட்பாளா்கள் பட்டியல் இறுதிச் செய்யப்பட்ட நாள்களிலிருந்து காலை முதல் மாலை வரை இருசக்கர வாகனங்களிலும், நடந்து சென்றும் தங்களது வாக்குச் சேகரித்தனா். சில வேட்பாளா்கள் தன்னந்தனியாகச் சென்றும் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனா். கிராம உள்ளாட்சித் தோ்தல் என்பதால், கட்சி சின்னங்களில் நிற்கும் மாவட்ட கவுன்சிலா் வேட்பாளா்கள் கூட இருசக்கர வாகனங்களையே அதிகம் பயன்படுத்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT