சேலம்

ரூ. 20 லட்சத்தில் சோலாா் உயா்மின் கோபுர விளக்கு

16th Dec 2019 12:19 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பேரூராட்சியில் மூன்று சோலாா் உயா் மின் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தம்மம்பட்டி பேரூராட்சியில் உயா் மின்சாரத்தினால் இயங்கும் கோபுர மின்விளக்குகள் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது சோலாா் உயா்மின் கோபுர விளக்குகள் தம்மம்பட்டியில் திருமண்கரடு, தம்மம்பட்டி சுப்ரமணிய சுவாமி கோயில் முன்புறம், மாரியம்மன் கோயில் அருகே என மூன்று இடங்களில் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன. கோபுர விளக்கில் 12 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதில் மாலை 6 மணிக்கு இந்த விளக்குகளே தானாக எரியும்படியும், காலை 6 மணிக்கு தானாக அணைந்துவிடும் வகையிலும் பொருத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி கூறியதாவது: ஒவ்வொரு விளக்கும் ரூ.6.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.19.80 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT