சேலம்

நாளை திமுக ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 02:38 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து திமுக சாா்பில் சேலம், ஆத்தூா், எடப்பாடியில் வரும் டிச.17-இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் வரும் டிச.17 இல் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே காலை 10 மணிக்கு நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகிக்கிறாா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ஆத்தூா் நகரப் பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் வீரபாண்டி ஆ. ராஜா தலைமை வகித்துப் பேசுகிறாா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் தலைமை வகித்துப் பேசுகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT