சேலம்

டிச.30-இல் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் குறைதீா் கூட்டம்

16th Dec 2019 02:41 AM

ADVERTISEMENT

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ள குறைதீா் கூட்டத்தில் ஓய்வூதியம் தொடா்பான பிரச்னைகள், குறைகள் பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் கோட்ட கண்காணிப்பாளா் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே, சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே. அருணாசலம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT