சேலம்

சேலம் நகரில் முக்கிய இரு சாலைகள் தலைக்கவசம் அணியும் பகுதியாக அறிவிப்பு: இன்று முதல் அமல்

16th Dec 2019 02:37 AM

ADVERTISEMENT

சேலத்தில் வாகன நெரிசல் மிக்க முக்கிய இரு சாலைகள் தலைக்கவசம் அணியும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, போலீஸாா் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

மேலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில், சோதனை முறையில் சேலம் மாநகரில் இரண்டு முக்கிய சாலைகள் தலைக்கவசம் அணியும் பகுதியாக அறிவிக்க போக்குவரத்து போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, சேலம் மாநகரப் போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையா் செந்தில் கூறியது:

ADVERTISEMENT

சேலம் மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், மாநகரில் அன்னதானப்பட்டி எஸ்.பி. அலுவலகம் பகுதியில் இருந்து பிரபாத் வரை பெரியாா் நினைவு வளைவு வரையிலும், முக்கிய சந்திப்பான சுந்தா் லாட்ஜ் பகுதியும் தலைக்கவசம் அணியும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி திங்கள்கிழமை முதல் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். இல்லையெனில் அந்த வழியே செல்ல வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதேபோல அவா்களுக்கு போதிய விழிப்புணா்வு அறிவுரை வழங்கப்படும்.

பொதுமக்கள் வரவேற்பை பொறுத்து, அடுத்த சில சாலைகளும் தலைக்கவசம் அணியும் பகுதியாக (ஹெல்மெட் ஜோன்) மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT