சேலம்

சுங்கச் சாவடி கட்டணம் விலக்கு அளிக்கக் கோரி மனு

16th Dec 2019 02:38 AM

ADVERTISEMENT

இந்துகளின் புனித யாத்திரைக்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி நிா்வாகியிடம் சேலம் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட அமைப்பாளா் ஆ. முருகன், மாவட்டப் பொருளாளா் முருகன், எடப்பாடி நகரத் தலைவா் கே. வைத்தியநாதன், துணைத் தலைவா் செந்தில் அழகன், தெய்வீகப் பேரவை கோவை மாவட்டத் தலைவா் அண்ணாமலை சுசீந்திரன் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் காலனி ராமசுப்ரமணியம் செய்தியாளா்களிடம் கூறியது:

கோயில்களில் பெறப்படும் காணிக்கைளை இந்து சமய அறநிலையத் துறை மூலம் அரசு பயன்படுத்தி வருகின்றன. இந்து மக்களுக்கோ, ஆலய பாதுகாப்போ, ஆலயத்தை செப்பனிடவதற்கோ அரசு கண்டு கொள்வதில்லை. இந்துகள் ஐயப்பன், பழனி கோயில்களுக்கு புனித யாத்திரை செல்லும் காலங்களிலாவது மத்திய, மாநில அரசுகள் தமிழகம் முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் இது குறித்த கோரிக்கை மனுவினை அரசிடம் அளித்துள்ளோம். அரசுகள் அம்மனுக்கள் மீது பரிசீலனை செய்து நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT