சங்ககிரி மலையில் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்டுள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் வைத்து நைவேத்தியம் படைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன.
வரதாரஜபெருமாள் கோயிலுக்கு பின்புறம் உள்ள பழமை வாய்ந்த ராகு, கேது சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள மண் சட்டியில் பாலை அதிகளவில் ஊற்றி வைத்து வழிப்பட்டுச் சென்றனா்.