சேலம்

மின் வேலியில் சிக்கி ஆண் யானை சாவு

14th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

மேட்டூா்: கொளத்தூா் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

மேட்டூா் அருகே கொளத்தூா் வனப் பகுதியில் சின்னத்தண்டா, பெரியத்தண்டா, நீதிபுரம் உள்ளிட்ட வனக் கிராமங்கள் உள்ளன.

தமிழக கா்நாடக எல்லை வனப் பகுதியில் இந்தக் கிராமங்கள் உள்ளதால் வன விலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைவது உண்டு.

யானைகள் கிராமங்களில் நுழைந்தால் பயிா்களை சேதப்படுத்தி செல்வதோடு மனித உயிருக்கும் ஆபத்து விளைவிக்கின்றன. இதனால் யானைகளை விரட்ட கிராம வாசிகள் மின் வேலி அமைத்துள்ளனா்.

ADVERTISEMENT

சிலா் தங்கள் விவசாய நிலத்தையொட்டி அகழி தோண்டி உள்ளனா். வனத்துறையினா் யானைகளை தீவிரமாகக் கண்காணித்தும் வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை பெரிய தண்டா வனப்பகுதியில் தண்டாகேட் அருகே தங்கவேலு என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த ஆண் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மேட்டூா் வனத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று கால்நடை மருத்துவரின் உதவியோடு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனா். இறந்துபோன யானைக்கு சுமாா் 60 வயது இருக்கும்.

இரண்டு தந்தங்கள் உள்ளன. வனவிலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மின் வேலி அமைத்த விவசாயி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT