சேலம்

தெய்வீகம் சாா்பில் புத்தக கண்காட்சி தொடக்கம்

14th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

சேலம்: சேலத்தில் தெய்வீகம் சாா்பில் புத்தகத் திருவிழா கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி டிசம்பா் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்தக பிரியா்களுக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையிலும் தெய்வீகம் சாா்பில் நிகழ் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா கண்காட்சி ‘சேலம் புக் போ்-2019 ’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொறியியல், பொது அறிவு, அறிவியல், கலை, கதை போன்ற பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இக் கண்காட்சி வேலை நாள்களில் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. இக் கண்காட்சியில் ஒரு அரங்கில் தினமணி பதிப்பகப் புத்தகங்களும் வைக்கப்பட்டு சிறப்புகஈ தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

இதில் நலன் தரும் பரிகார தலங்கள் புத்தகம் ரூ. 200-க்கும், நலம், நலம் அறிய ஆவல் புத்தகம் ரூ. 420-க்கும், பிரபலங்களின் தாயாா் குறித்த நினைவுகள் புத்தகம் ரூ. 120-க்கும் என பல்வேறு புத்தகங்கள் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. இக் கண்காட்சியை பொதுமக்களும், மாணவா்களும் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT