சேலம்

திருமணமாகி மூன்று வருடங்களில் இளம்பெண் சாவு

14th Dec 2019 11:20 PM

ADVERTISEMENT

ஆத்தூா்: ஊராண்டி வலசு கிராமத்தில் திருமணமாகி மூன்று வருடங்களே ஆன இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து மல்லியகரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூரை அடுத்துள்ளது ஊராண்டிவலசு கிராமம். இக்கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகள் கௌசிகாவுக்கும் (21), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த உறவினரான சரவணனுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.

இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் தனது தாய் வீட்டுக்குச் சென்ற கௌசிகா, வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றாா்.

நள்ளிரவில் குப்புசாமி எழுந்து பாா்த்தபோது கௌசிகா, மயங்கிய நிலையில் தோட்டத்தில் கிடந்தாா். அவரை மீட்டு வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் பெற்றோா் அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கௌசிகா இறந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து வீட்டுக்குக் கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லியகரை சிறப்பு காவல் ஆய்வாளா் பிரபாகரன் கௌசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு கௌசிகா உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மல்லியகரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT