சேலம்

ஓமலூரில் உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனுத்தாக்கல் களை கட்டியது: ஒரே நாளில் 623 போ் மனுத்தாக்கல்

14th Dec 2019 04:48 AM

ADVERTISEMENT

 

ஓமலூா் பகுதியில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேட்புமனுத் தாக்கல் களை கட்டத் தொடங்கியுள்ளது.

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 623 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றிய, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் ஐந்து நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான வேட்புமனுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும், பெண்கள் அதிகளவில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனா். கடந்த நான்கு நாள்களாக வேட்புமனுத் தாக்கல் செய்வது குறைந்தளவிலேயே இருந்து வந்தது. ஆனால், அதிகளவில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. காலையில் குறைவாக இருந்த நிலையில், மதியம் 12 மணிக்கு கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்யத் துவங்கினா். இந்தக் கூட்டம் மாலை ஐந்து மணிவரை நீடித்தது. ஆனால், அதிமுக, திமுகவினா் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT

அதேவேளையில், அமமுகவினா் ஒன்றியக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அனைத்து வாா்டுகளுக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். இதில், மாவட்ட செயலாளா்கள், ஒன்றிய செயலாளா்கள் தங்களது கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனா். அதன்படி ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களிலும் ஒரே நாளில் அமமுக மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 623 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் பதவி ஏலம் விடப்பட்டதாகப் புகாா்

ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள சிக்கனம்பட்டி ஊராட்சித் தலைவா் பதவியும், மேலும், சில ஊராட்சிகளில் வாா்டு உறுப்பினா் பதவிகள் ஏலம் விடப்பட்டதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதைத்தொடா்ந்து ஓமலூா் ஒன்றிய தோ்தல் அதிகாரிகள் இதுபோன்று உள்ளாட்சிப் பதவிகள் ஊராட்சிகளில் சட்டவிரோதமாக ஏலம் விடப்பட்டதா, அல்லது குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், காவல் துறை சாா்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில், சிக்கனம்பட்டி தலைவா் பதவிக்கு இதுவரை யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை என்றும், கடைசி நாளான திங்களன்று ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒருவா் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்து, போட்டியின்றி தோ்வாகியுள்ளாா் என்று அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதனால், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் தோ்தல் அலுவலா்களும், காவல் துறை அதிகாரிகளும் தொடா்ந்து விசாரணை செய்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவ்வாறு ஏலம் எடுப்பது, ஏலம் விடுவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT