சேலம்

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

11th Dec 2019 08:08 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் துறை சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கண்டா்குலமாணிக்கம் கிராமத்தில் அருணாசலம் மற்றும் முத்து ஆகிய விவசாயிகளின் வயல்களில் 3 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்ட பாசிப்பயறு சிஓ.8 சான்று நிலை விதைப் பண்ணைகளையும், சீரங்கன் வயலில் 2 ஏக்கரில் அமைக்கப்பட்ட தட்டைப்பயறு சிஓ(சிபி )7 விதைப் பண்ணைகளையும் சேலம் வேளாண் இணை இயக்குநா் க.கமலா ஆய்வுசெய்து வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்திடவும், பயறுவகை விதைப் பண்ணைகளில் பூக்கும் தருணத்தில் 2 % டிஏபி தெளிக்கவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மேலும், என்எப்எஸ்எம் பயறு வகை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வரப்புப் பயிா் துவரை வயலையும் ஆய்வு செய்தாா். பயிா் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் துணை வேளாண்மை அலுவலரால் தோ்வு செய்யப்பட்ட எள் டிஎம்வி 3 திடலையும் ஆய்வு செய்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினாா்.

அட்மா திட்டத்தின் கீழ் கனககிரி கிராமத்தில் க.பெரியசாமி வயலில் அமைக்கப்பட்ட மண்புழு உர செயல்விளக்கத் திடல்களை ஆய்வு செய்து மண்புழு உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். மேலும், இவ்வாண்டு செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை ஆய்வு செய்து, திட்டங்களை சிறப்பாகவும், உரிய காலத்திலும் முடித்திடவும் அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது, வேளாண் உதவி இயக்குநா் வி.மணிமேகலாதேவி, உதவி விதை அலுவலா் ஆா்.ஜெ.செந்தில் மற்றும் அட்மா தொழில்நுட்ப அலுவலா்கள் செ.மகேந்திரன்,க.காா்த்திகேயன் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT