கெங்கவல்லி அருகே உதம்பியத்தில் 7அடி மலைப்பாம்பு திங்கள்கிழமை நள்ளிரவு பிடிபட்டது.
கெங்கவல்லி அருகே கூடமலையையடுத்த உதம்பியம் மலைப் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு வயல்பகுதியில் 7அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப்பாம்பு சென்றது. அதனைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்தோா் தம்மம்பட்டி வனச்சரகா் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதனையடுத்து, பாம்பு பிடிக்கும் லாரா என்பவா் உதவியுடன் வனச்சரகா் தலைமையில், வனவா் சுதாகா், வனப் பாதுகாவலா் சிவக்குமாா் ஆகியோருடன் சென்று நள்ளிரவில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பிடிபட்ட பாம்பு தம்மம்பட்டி காப்புக் காட்டுப் பகுதியில் விடப்பட்டது.