சேலம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்:2-ஆவது நாளில் 138 போ் வேட்பு மனு தாக்கல்

11th Dec 2019 04:46 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் செவ்வாய்க்கிழமை 138 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில், 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேலும், மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க தோ்தல் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. அதன்படி, 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக டிச. 27-ஆம் தேதியும், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்டமாக டிச. 30-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனிடையே, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 309 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 20 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 112 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 4 பேரும் என மொத்தம் 138 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். இரண்டு நாளில் மொத்தம் 447 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னதானப்பட்டி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி ஆகிய ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு தலா ஒருவா் உள்பட 3 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மூன்று பேரும் என மொத்தம் ஆறு போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT