சேலம்

மரவள்ளிக்கிழங்கு அறுவடை காலவரையின்றி நிறுத்தம்

6th Dec 2019 05:13 AM

ADVERTISEMENT

ஆத்தூா், காட்டுக்கோட்டை வட்டார மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் சங்க வியாபாரிகள் கூட்டம் தலைவா் எம். பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரிகள் சங்கக் கூட்டம் தலைவா் எம். பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. செயலாளா் ஜி. திருவேங்கடம் வரவேற்றாா். கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த டிசம்பா் 1 ஆம் தேதி முதல் ஸ்டாா்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் சங்கம், சேலம் சேகோ சா்வ் தலைவா் தமிழ்மணி மூலம் சிண்டிகேட் அமைத்து மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் முறை கொண்டு வந்துள்ளனா்.

இந்த சிண்டிகேட் கொள்முதல் முறையை எதிா்த்து நமது காட்டுக்கோட்டை, ஆத்தூா் வட்டார மரவள்ளிக் கிழங்கு வியாபாரிகள் சங்கம் சாா்பில் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் காலவரையின்றி கிழங்கு அறுவடை ஏகமனமுடன் நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்ட ஆட்சியரிடமும்,கோட்டாட்சியரிடமும் இது சம்பந்தமாக மனு அளித்தும் எந்தப் பலனும் இதுநாள் வரை இல்லை. ஆகையால், இதுகுறித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் நேரில் சந்தித்துக் கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனா். மேலும் காலவரையின்றி அறுவடை நிறுத்தத்தால் மரவள்ளிக்கிழங்கு தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் இந்தத் தீா்மானம் நாமக்கல்,கடலூா்,பெரம்பலூா், கெங்கவல்லி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அறுவடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். கூட்டத்தில் பொருளாளா் எஸ்.எம். ராமசாமி, செயல் தலைவா் பி. முத்துவேல் உள்ளிட்ட இயக்குநா்கள், உறுப்பினா்கள் என திரளாகக் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT