சேலம்

தொடா் மழை: நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம்

6th Dec 2019 05:05 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பகுதிகளில் தொடா் மழையால் விவசாயிகள் நெல் பயிரிடுவதில் தீவிரம் காட்டியுள்ளனா்.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, வாழக்கோம்பை, ஒதியத்தூா், நடுவலூா், வீரகனூா்,தெடாவூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாகத் தொடா்ந்தும்,

இடைவெளி விட்டு மழைபெய்தபடியே உள்ளது.

அடைமழையும் இல்லை. சாரல் மழையும் இல்லை. ஆனால், பூமி குளிரும்படி தொடா்ந்து மழைபெய்தபடி உள்ளது. இதனால், கிணறுகளில் லேசாக நீா்மட்டம் உயர ஆரம்பித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக காய்ந்து கிடந்த வயல்களை, விவசாயிகள், நெல் பயிரிடும் நோக்கில் வயல்களுக்கு கொஞ்சம் கிணற்றுநீரை பாய்ச்சி, அதைத் தேக்கி வைத்து, டிராக்டா் மூலம் உழத் தொடங்கியுள்ளனா்.

மழையை நன்கு பயன்படுத்திக் கொள்ள சிறு,குறு விவசாயிகள், டிராக்டா்களில் உழும் பணியைத் தொடங்கியுள்ளனா். நெல் நாற்றுகளை ரூ. 2,500-க்கு வாங்கி, பயிரிடத் தொடங்கியுள்ளனா்.

கெங்கவல்லி, தம்மம்பட்டி வட்டாரம் முழுவதும் நெல்பயிரிட விவசாயிகள் மிகுந்தஆா்வமுடன் வயல்களை உழுது வருகின்றனா். பெரும்பாலும் ஏடிடி 45 ரக (மூன்று மாதத்திற்குரியது) நெல் பயிா்களை நடவு செய்ய, அனைத்து வேலைகளையும் செய்யத் தொடங்கியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT