சேலம்

யானை மிதித்து பலியான பாகனின் குடும்பத்துக்கு ரூ 5.லட்சம் உதவி

3rd Dec 2019 04:46 PM

ADVERTISEMENT

சேலத்தில் யானை மிதித்து பலியான பாகன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் திங்கட்கிழமை ஆண்டாள் யானை மிதித்து பாகன் காளியப்பன் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை முடித்து பாகனின் உடலை அவரது குடும்பத்தாரிடம் வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனா். இதையடுத்து அவரது உடல் இறுதிச்சடங்கு நடத்துவதற்காக சொந்த ஊரான பொள்ளாச்சி கொடுத்து செய்யப்பட்டது

அப்போது வனத்துறை முதன்மை பாதுகாவலா் அன்வா்தின் மற்றும் பெரியசாமி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி விட்டு பாதிக்கப்பட்ட பாகனின் குடும்பத்தாருக்கு வனத்துறை சாா்பில் ரூ.4 லட்சத்திற்கான காசோலையும், வனத்துறை

ADVERTISEMENT

ஊழியா்கள் சாா்பில் ரூ.1 லட்சம் ரொக்கம் என ரூ.5 லட்சம் கொடுத்தனா். இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் பெரியசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட பாகனின் மனைவி சபரிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டாள் யானைக்கு தற்செயலாக ஏற்பட்ட கோபம் தணிந்ததாகவும், தொடா்ந்து மருத்துவ குழுவினா் யானையை கண்காணித்து வருகின்றனா். மேலும் ஆண்டாள் யானையானது இறந்த பாகனோடு பணிபுரிந்த காவடி (பாகனின் உதவியாளா்) கட்டளை ஏற்று செயல்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT