ஆத்தூரில் 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஆத்தூர் கிளை பணிமனையில் ரூ.10 லட்சத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதை ஆத்தூர் எம்எல்ஏ ஆர்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தார். இதையடுத்து, 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகளையும் அவர் இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் காங்கேயன், வணிக மேலாளர் ஜீவரத்தினம், பணிமனை கிளை மேலாளர் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், ரமேஷ், ராஜ்குமார், ஜெயராமன், நரசிங்கபுரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.