ஓமலூர், காடையாம்பட்டி வட்டார அரசுப் பள்ளிகளில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திதிபோஜன் நல்விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் பெருமைகளை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆசிரியர்கள் தெரிவித்தனர். நாட்டை ஒற்றுமையாக வழிநடத்தவும், அமைதி, அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை காந்தி கடைபிடித்தார். அவரது போதனைகளை நமது நட்டு மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் கடைபிடித்து வருகின்றனர். அதனால், மாணவர்கள் மகாத்மா காந்தியை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, திதிபூஜன் நல்விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கப்பட்டது.