கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள வரலாற்றுப் பாட ஆசிரியர்களுக்கு 7, 8-ஆம் வகுப்பின் புதிய பாடப் புத்தகம் குறித்த இரு நாள் பயிற்சி கெங்கவல்லி வட்டார வள மையத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
இதில் வரலாறு, புவியியல் தொடர்பாக பாடக் கருத்து விளக்கங்கள், காணொலி மூலமும் , இணையதள வாயிலாக கூடுதல் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பயிற்சிகளை வட்டார ஆசிரியர் பயிற்றுநர் சுப்ரமணி, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
பயிற்சியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணி முத்து, மேற்பார்வையாளர் (பொ) சுஜாதா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். பயிற்சியில் ஒன்றியத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள வரலாற்றுப் பாட, பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.