விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயிலில் தங்கக் கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா தங்கக் கவச சாத்துப்படி, நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை
(செப்.2) மாலை தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து முக்கிய தினங்களான செப்டம்பர் 4 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலாவும், செப்டம்பர் 12 ஆம் தேதி 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெற உள்ளன.
மேலும், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை நாள்தோறும் காலை சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனையும் நடைபெறுகின்றன. செப்டம்பர் 12 ஆம் தேதி அன்னதானமும் வழங்கப்பட உள்ளது என கோயிலின் செயல் அலுவலர் கோ. தமிழரசு, இரட்டைப்பூட்டு அலுவலர் சு. கல்பனாதத் ஆகியோர் தெரிவித்தனர்.