ஏற்காட்டில் செங்காடு, போட்டுக்காடு கிராமத்துக்குச் செல்லும் பிரிவு சாலையில் எதிர்எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இப் பிரிவு சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்துகள், வாகனங்கள் அதிகம் செல்கின்றன. போட்டுக்காடு கிராமத்தில் சுற்றுலா பகுதியான பக்கோடா காட்சி முனை உள்ளதால் அதிகமான வாகனங்கள் அப் பகுதிகளுக்குச் செல்கின்றன. போட்டுக்காடு கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளதால் மது அருந்துவேர் வானங்களில் வேகமாகச் செல்வதும் விபத்து ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செங்காடு போட்டுக்காடு பிரிவு சாலையில் ஆய்வு செய்து வேகத் தடை, விழிப்புணர்வு பதாகைகள் அமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.