சேலம்

ஆத்தூரில் 520 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

27th Aug 2019 11:09 AM

ADVERTISEMENT

ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ர.சரஸ்வதி உத்தரவின்பேரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பேப்பர் கப்புகள் 520 கிலோ திங்கள்கிழமை கடைக்காரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆத்தூர் நகராட்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பேப்பர் கப்புகள் பயன்பாட்டில் இருந்தால் பறிமுதல் செய்ய ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ர.சரஸ்வதி உத்தரவிட்டார். இதனையடுத்து சுகாதார அலுவலர் திருமூர்த்தி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் ஆத்தூர் சாரதா ரவுண்டானா அருகில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கடை நடத்தி வரும் ஜெகதீஸ்வரன் (55) என்பவரிடமிருந்து 520 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பேப்பர் கப்புகள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT