சேலம்

ஆத்தூரில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

27th Aug 2019 11:05 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் மு.செயராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பாளர் வ.கோபால்ராசு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் மதிமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் சரிவர கழிவுநீர் ஓடைகள் சுத்தப்படுத்தாமலும், தேங்கி கிடக்கும் குப்பைகளை சரியான முறையில் அகற்றாமலும் ஆத்தூர் நகரை மாசுமிக்க நகரமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறது. மேலும் சென்னையில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து 30 வாகனங்களில் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 20 வருடங்களுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினரானதற்குப் பாராட்டை
தெரிவித்துக் கொண்டனர்.  

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் ந. மகேந்திர வர்மன்,லிபியா சந்திரசேகர், ஆடிட்டர் ரஜினி, ஒன்றியச் செயலாளர்கள் கு.கலைவாணன், ஆ.  ரவிச்சந்திரன், எம்.ஆர். செல்வராசு, துரை ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மருதமுத்து, அண்ணாமலை, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கே.எஸ்.செல்லபாப்பு, தங்கநெடுமாறன், மாநில மருத்துவரணி சங்கேஸ்வரன், வைகோ ராஜேந்திரன், பி.செல்வக்குமார் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT