சேலம்

பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

23rd Aug 2019 09:24 AM

ADVERTISEMENT

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
 ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் இராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் குழந்தைகள் கிருஷ்ணர்,ராதை வேடமணிந்து நாடக,நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் சுகிதா தினேஷ், பகவான் கிருஷ்ணரின் குரும்புகளை எடுத்துரைத்தார்.
 நிகழ்ச்சியில் செயலாளர் டி.மாசிலாமணி, கல்விக் குழுத் தலைவர் ஆர்.கனகராஜன்,பொருளாளர் ஈ.எஸ்.மணி, துணைத் தலைவர் ஆர்.ரங்கசாமி, இணைச் செயலாளர் கே.ரவிக்குமார்,இயக்குனர்கள் சுசிலா ராஜமாணிக்கம்,ஆனந்த், ராதாகிருஷ்ணன்,பி.குமரேசன்,செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இதேபோல், மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா, தலைவர் பழனியப்பன் தலைமையில் கொண்டாடினார்கள்.மாணவ,மாணவிகள் ராதை,கிருஷ்ணர் வேடமணிந்து வந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் செயலாளர் மண்மணி ,பொருளாளர் சுப்ரமணியன்,ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT