சேலம்

தறித்தொழிலாளியைக் கத்தியால் வெட்டி செல்லிடப்பேசி பறிப்பு  

23rd Aug 2019 09:23 AM

ADVERTISEMENT

சேலத்தில் தறித்தொழிலாளியை கத்தியால் வெட்டி செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 சேலம் அம்மாப்பேட்டை கொய்யாதோப்பு பாலமுருகன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (34). இவர் நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த போது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கோவிந்தராஜுடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் மணி என்னவென்று அவர் கேட்கவே, கோவிந்தராஜ் தனது சட்டைப்பையில் இருந்த செல்லிடப்பேசியை வெளியே எடுத்தபோது திடீரென அந்த இளைஞர் கோவிந்தராஜை கத்தியால் தாக்கியுள்ளார். பின்னர் கோவிந்தராஜிடமிருந்த செல்லிடப்பேசியைப் பறித்துவிட்டு வேறொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டார்.
 இதில் காயமடைந்த கோவிந்தராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT