சேலம்

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

16th Aug 2019 09:30 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாரிமுத்து (60). இவர், கடந்த 2014 , ஜூலை 23 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ,15வயது நிரம்பிய, ஒன்பதாம் வகுப்பு மாணவியை, தன் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
 இதுகுறித்து, அச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.
 இந்த வழக்கு, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை ,மாரிமுத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT