சேலம்

எடப்பாடி தொகுதியில் வாக்காளர் விவரம் சரிபார்ப்பு முகாம் இன்று தொடக்கம்  

16th Aug 2019 09:28 AM

ADVERTISEMENT

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளர் விவரம் சரிபார்ப்பு சிறப்பு முகாம் ஆக.16 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதுகுறித்து, எடப்பாடி வட்டாட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எடப்பாடி வட்டப் பகுதியில் வாக்காளர்களுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த முன்னேற்பாடுகளுக்கான வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்திடும், சிறப்பு முகாம் வரும் 16 -ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும், என்.வி.எஸ்.பி. என்ற இணையதளம் வாயிலாகவும், வோட்டர் ஹெல்ப்லைன் செயலி வாயிலாகவும், அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை வாயிலாகவோ வாக்காளார் பட்டியலில் உள்ள விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
 இணையதள சேவையைப் பயன்படுத்த இயலாத வாக்காளர்கள், தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாடிக்கு நேரில் சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் (பி.எல்.ஓ), தங்களின் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது விவசாயிகளுக்கான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
 இணையதளம் வாயிலாக தங்களின் வாக்காளர் பட்டியில் விவரங்களை அறியவிரும்பும் வாக்காளர்கள், மேற்கண்ட 7 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்றம் செய்து, தங்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், இம்முகாம் குறித்த விவரங்களை அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT