சேலம்

அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்  

16th Aug 2019 09:29 AM

ADVERTISEMENT

சேலம் பெரிய சீரகாபாடியில் உள்ள அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் 73வது ஆண்டு சுதந்திர தின விழா கல்லூரியின் முதல்வர் அன்புச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் சி சரவணன் முன்னிலை வகித்தார். விநாயக மிஷின்ஸ் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் இயக்குநர் இராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து எழுச்சியுரை ஆற்றினார். மேலும் அவர் பேசுகையில், இந்திய தேச விடுதலைக்காகப் போராடிய தியாகிகள் செய்த மகத்தான தியாகங்களை பட்டியலிட்டார். உலகின் வல்லரசாகவும், நல்லரசாகவும் இந்தியாவை உருவாக்குவதே அந்த புனிதர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அதை செய்கிற ஆற்றல் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்து செயல்படுமாறு மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
 கல்வியையும் தேசப் பற்றையும் இரு கண்களாக போற்றுமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். விழாவில் பேசிய முதல்வர் நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க நாம் அனைவரும் நீரின் மகத்துவத்தை உணர்ந்து நீரைச்ச சேமிக்க வேண்டும் என்றும், எதிர் வரும் காலங்களில் மாணவர்கள் அவரவர்களின் பிறந்த நாளுக்கு ஒவ்வொரு மரக்கன்றுகளை வீட்டிலோ அல்லது படிக்கும் கல்லூரிகளிலோ, நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 அதன் பின் 73-வது சுதந்திர விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் ஒவ்வொரு மாணவரும் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். விழாவில் முதலாமாண்டு டீன் சரவணன் நிர்வாக அதிகாரி விக்னேஷ் , துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
 விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் க.சண்முகவேல் செய்திருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT