சேலம்

சேலம் மாநகராட்சியில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

11th Aug 2019 03:25 AM

ADVERTISEMENT


சேலம் மாநகராட்சி பகுதியில் மின்வாரியம், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக ஆக. 13, 14 ஆகிய 2 நாள்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் மேட்டூர் தொட்டில்பட்டியில் ஆக. 13-ஆம் தேதி தமிழ்நாடு மின் வாரியத்தால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதாலும், ஆக. 14-ஆம் தேதி மாநகராட்சியின் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாலும் இவ்விரு நாள்கள் மட்டும் தனிக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் இருக்காது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT