நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

28th Sep 2023 12:52 AM

ADVERTISEMENT

பள்ளிபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, வெப்படையில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஆனால் அவருக்கு சரியாக படிப்பு வராததால் அங்குள்ள தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளாா்.

கடந்த 2014 டிச.31-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், ஜெயந்தி வீட்டில் இருந்து வெளியே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த வெப்படையைச் சோ்ந்த முருகன்(24), சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளாா். இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதனையடுத்து முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகளும், மேலும், இரு பிரிவுகளில் 5 ஆண்டுகள், 2 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT