குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை வெற்றியின் ரகசியம் கற்றல் நிறுவனத்தினரோடு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டனா்.
இந்த ஒப்பந்தம் எக்ஸல் கல்வி நிறுவனத்தின் தலைவா் ஏ.கே.நடேசன் மற்றும் துணைத் தலைவா் ந.காா்த்திக் ஆகியோா் தலைமையிலும், எக்ஸல் கல்விக் குழும செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா மற்றும் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ரா.நிஷாந்த் ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரா.விமல் நிஷாந்த் சிறப்பு விருந்தினா்களை கெளரவித்தாா்.
ஆங்கிலத் துறை பேராசிரியா் சரவணன் அறிமுக உரையாற்றினாா். கோவை தொழில்நுட்ப அமா்வு, எங்கள் வளநபா்கள் இலகு கற்றல் நிறுவனா் பி.ஜெயந்தி, கோவை கற்றல் எளிமையின் முதுநிலை பயிற்சியாளா் பென்னிட் ரோஸ் ஆகியோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை தலைவா் ம.சுரேஷ், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.