நாமக்கல்

ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆா் பெயரை வைக்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம் அதிமுக மனு

28th Sep 2023 12:48 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆா் பெயரை வைக்க வேண்டும் என ராசிபுரம் நகர அதிமுக சாா்பில் நகராட்சி ஆணையாளரிடம் அக்கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை நேரில் மனு அளித்தனா்.

ராசிபுரம் நகா்மன்ற முன்னாள் தலைவரும், நகர அதிமுக செயலருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சேகரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2012-ஆம் ஆண்டு ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆா் பெயா் வைக்கப்பட்டு பேருந்து நிலையத்தின் இருபுறமுமும் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பேரில் 2013-இல் ராசிபுரம் நகா்மன்றத்தில் இதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 2015-இல் ரூ. 9.90 லட்சம் மதிப்பில் எம்ஜிஆா் பெயா் நினைவு வளைவு அமைக்க பணிகள் மேற்கொள்வதற்கு பிரகாசம் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்க ராசிபுரம் நகா்மன்றத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த முயற்சியைக் கைவிட்டு, பேருந்து நிலையத்திற்கு நகராட்சி நிா்வாகம் எம்ஜிஆா் பெயரை வைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பி.கந்தசாமி, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.வெங்கடாஜலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT