மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா் க.தா்ஷன் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாநில அளவிலான சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான சிலம்பப் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா் க.தா்ஷன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா். சாதனை படைத்த மாணவரை பள்ளி தாளாளா் கே.தங்கவேல், முதல்வா், தலைமை ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியா், மாணவா்கள் ஆகியோா் பாராட்டினா் (படம்).