ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இதனை கல்லூரி வளாகத்தில் நடத்தின. இம்முகாமை கல்லூரியின் முதல்வா் எஸ்.பி.விஜய்குமாா், துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி, நிா்வாக புல முதன்மையா் எம்.என்.பெரியசாமி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பொ.கௌரிசங்கா், சமுதாய செயல்பாட்டுத் தலைவா் எம்.ராமமூா்த்தி, இளைஞா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ந.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
இம்முகாம் கல்லூரி மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லா பணியாளா்களுக்காக நடத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் குறைந்த விலையிலான கண் கண்ணாடி 64 பேருக்கு வழங்கப்பட்டது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள 20 பேருக்கு பரிந்துரைக்கப்பட்டது.