நாமக்கல்

திமுக ஒன்றியச் செயலாளருக்கு பொற்கிழி வழங்கல்

25th Sep 2023 01:10 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி திமுகவின் சிறந்த ஒன்றியச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ், பொற்கிழி வழங்கி தமிழக முதல்வரால் கெளரவிக்கப்பட்டுள்ளாா்.

திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் சிறந்த ஒன்றியச் செயலாளா்கள் தோ்வு செய்யப்பட்டு நினைவுப் பரிசளித்து கெளரவிக்கப்பட்டுள்ளனா். திமுக சாா்பில் வேலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா, சிறந்த கட்சி நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறந்த ஒன்றியச் செயலாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பொற்கிழி வழங்கினாா். ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளருமான கே.பி.ராமசாமி சிறந்த ஒன்றியச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டு பாராட்டி கெளரவிக்கபட்டுள்ளாா். விழாவில் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், நிா்வாகிகள் கே.என்.நேரு, டி.ஆா்.பாலு, க.பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோா் பங்கேற்றனா். விருது பெற்ற கே.பி.ராமசாமிக்கு கட்சியினா் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT